மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய வீரர்கள் நினைவு தினம்
யூலைக் கலவரத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கதின் முன்னாள் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை உட்பட 53 போராளிகளின் நினைவான தமிழ்த் தேசிய வீரர்கள் தினத்தின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (29)தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணகரம் தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.


இதன்போது கட்சியின் தலைவர் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவர் ஆகியோரால் குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி ஈகைச் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கட்சியின் உபதலைவர் இந்திரகுமார் பிரசன்னா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை முன்னால் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்கள் உள்ளிட்ட முன்னாள் பிரதிநிகள், கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.


புதியது பழையவை