பாடசாலையில் மாணவியை சேர்ப்பதாக கூறி பணமோசடி



2020ஆம் ஆண்டு கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை சேர்த்துக் கொள்வதாக கூறி மூன்று இலட்சம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று (26) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸில் முறைப்பாடு
இது தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மெனிகின்ன பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இவ்வாறு வேறு நபர்களை ஏமாற்றியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேகநபரை இன்று 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைபடுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை