17 பிள்ளைகளை பெற்று 100 பேரக்குழந்தைகளை கண்ட தாய் உயிரிழந்தார்!திம்புலாகலை மலியதேவபுர பிரதேசத்தில் 17 பிள்ளைகளைப் பெற்றெடுத்து 100 பேரக்குழந்தைகளை கண்ட தாயான பூமணி உயிரிழந்தார்

பொலனறுவை, திம்புலாகலை, மலியதேவபுரவில் வசிக்கும் அவருக்கு ஏழு மகள்களும் 10 மகன்களும் இருந்தனர்.

அவருக்கு பதின்மூன்றாவது வயதில் திருமணம் நடந்தது, அவர் பெற்ற பதினேழு பிள்ளைகளில் மூன்று பேர் தற்போது இறந்துவிட்டனர்.


திம்புலாகல பரண மில்லனையில் வசிப்பிடமாக இருந்த பூமணி 75 வருடங்களுக்கு முன்னர் விமலதாச என்பவரை மணந்தார். 1990 ஆம் ஆண்டு கணவர் உயிரிழந்தார்.

திம்புலாகல பரணமில்லன கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் பதினேழு குழந்தைகளையும் பெற்றெடுத்த இவர் நீண்ட காலம் மருத்துவச்சியாகவும் பணியாற்றியமை விசேட அம்சமாகும்.


இவரது பிள்ளைகளில் சிலர் இராணுவம், திம்புலாகல உள்ளூராட்சி சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரிகின்றனர். ஏனையவர்கள் விவசாயிகள். இவரின் இறுதிச்சடங்கு நேற்றுமுன்தினம்(16) இடம்பெற்றது.
புதியது பழையவை