தடைகளை தாண்டி இடம்பெற்ற குருந்தூர் மலை பொங்கல்



முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தடைகளை தாண்டி கோலாகமாக பொங்கல் விழா இடம்பெற்றது. கடந்த காலங்களில் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வுக்கு சென்ற மக்கள் விரட்டி அடிக்கப்பட்டிருந்தனர்.

சிங்கள இனவாதிகளாலும் பொலிஸாராலும் குருந்தூர் மலையில் தமிழர்கள் பொங்கல் வைக்க இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

பொங்கல் வைக்க தடையில்லை - நீதிமன்றம் உத்தவு
அதுமட்டுமல்லாது குருந்தூர் மலையில் அடாத்தாக விகாரை அமைக்கப்பட்டதுடன், தொல்லியல் திணக்களமும் தன் பங்குக்கு தமிழர்களின் நிலத்தை தனதென அடாத்தாக ஆக்கிரமித்திருந்தது.

எனினும் தமிழ்மக்கள் குருந்தூர் மலையில் பொங்கல் வைக்க தடையில்லை என   நீதிமன்றம் உத்தவிட்டதை தொடர்ந்து இன்றையதினம், கோலாலமாக குருந்தூர் மலையில் தமிழ்மக்கள் பொங்கல் வைத்து வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.    

அதேவேளை இன்றைய தினம்  தென்னிலங்கை  மக்களும் குருந்தூர் மலைக்கு சென்று விகாரையில்  வழிபாடுகளை  மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை