சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த 54 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்!சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த 54 இலங்கையர்கள் இன்று புதன்கிழமை காலை (16.08.2023) நாடு திரும்பியுள்ளனர்.

வீசா இன்றி இலங்கைக்கு வர முடியாத நிலையில் குவைத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்தவர்கள் இன்று காலை (06.08.2023) குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 53 வீட்டுப் பணிப்பெண்களும் ஒரு வீட்டுப் பணியாளரும் அடங்குவர்.

இவ்வாறு வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனையவர்கள் பொலன்னறுவை, மொனராகலை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வருகை தந்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய கட்டணத்தை பெற்றுக்கொண்டு தமது இருப்பிடங்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை