தமிழ் மக்களின் காணிப்பிரச்சனைக்குத் தீர்வு?முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களம் ,மகாவலி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள்  குறித்தும் அதற்கான தீர்வினைப் பெருவது குறித்தும்   கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தினுடைய பிரதிநிதி இளங்கோவன் , நாடாளுமன்ற  உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான், நாடாளுமன்ற  உறுப்பினர்களான கு.திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன் உள்ளிட்ட பலரம் கலந்துகொண்டிருந்தனர்.
புதியது பழையவை