8 வயது மாணவி துஷ்பிரயோகம் -ஆசிரியர் கைது!நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றின் ஆசிரியர், நோர்வூட் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.


8 வயது மாணவியை துஸ்பிரயோகம் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் மாணவி ஒருவர் ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், அந்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை, ஹட்டன் நீதவான நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக குற்றத்தடுப்பு பிரவின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
புதியது பழையவை