ஏழைகளை பார்த்து குறி வைக்கும் - மட்டக்களப்பு மின்சார சபைஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சுமை வாழ்க்கைச் சுமைகளுக்கு மத்தியில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மின்சார சபையானது 5000 தொடக்கம் 10 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட தாமதித்ததன் காரணமாக மின்சாரத்தை துண்டித்து சென்ற மிகக் கேவலமான செயற்பாடு இன்று இடம்பெற்றுள்ளது.

கைக்குழந்தைகளுடனும் படிக்கிற பிள்ளைகளுடனும் வாழ்ந்து வரும் சாதாரண குடும்ப மக்கள் கணவர் பணம் செலுத்துவதற்காக சென்று இருக்கின்றார் என்று கூறிய போதும் மனிதநேயமற்று மின்சாரத்தை துண்டித்து சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் பல லட்சம் கணக்கில் மின்சார கட்டணங்கள் நிலுவையில் இருக்கின்ற நிலையில் ஏழைகளை பார்த்து குறி வைத்து மின்சார சபை நடக்கின்ற இந்த ஈனத்தன செயல் மட்டக்களப்பு மின்சார சவை சற்று சுய பரிசீலனை செய்ய வேண்டும் .

குறித்த நடவடிக்கை தொடர்பாக மின்சார சபை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்
புதியது பழையவை