மட்டு - வாகரையில் இடம்பெற்ற மோட்டர்சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!


நேற்(04-08-2023)மாலை மட்டக்களப்பு வாகரையில் இடம்பெற்ற மோட்டர்சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ஒருவருக்கு பலத்த காயம்.

நேற்று மாலை 4.00 மணியளவில் வாகரை கமநல கேந்திர நிலையத்திற்கு முன்பாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

இவ் விபத்தில் வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பால்சேனை நாகபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் டயரூபன் என்ற 20 வயதான இளைஞன் உயிரிழந்ததோடு அதே ஊரை சேர்ந்த 20 வயதான இன்னுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளனர்.

புதியது பழையவை