14 வயது சிறுமி விபசாரத்தில் - ஹோட்டல் உரிமையாளருக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு!14 வயது சிறுமியை விபசாரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 64 வயதான ஹோட்டல் முகாமையாளருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கில் குற்றத்தை சந்தேக நபர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த தீர்ப்பை அளித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூன்று இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 25,000 ரூபா அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் வயது முதிர்ந்தவராக மிகக் கடுமையான குற்றத்தைச் செய்துள்ளார் என்றும், குறிப்பாக அந்த நபர் பதின்ம வயது சிறுமி என்று தெரிந்தும் அவ்வாறு செய்வது மிகவும் தவறு என்றும் நீதிபதி திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும், குற்றத்தை ஏற்று பாதிக்கப்பட்டவருக்கு போதிய நட்டஈடு வழங்க குற்றவாளி சம்மதித்தமையினால் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையை விதிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கை எதிர்வரும் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
புதியது பழையவை