மட்டு - போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தில் புதிய பிரதேசசெயலாளர் பதவியேற்பு!



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (03-08-2023) ஆம் திகதி புதிய பிரதேச செயலாளராக திரு சோ. ரங்கநாதன் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார்.


இவர் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் மற்றும் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச செயலகங்களில் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .


நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசெயலக உதவிச்செயலாளர் திட்டமிடல் பணிப்பாளர் கலாச்சார உத்தியோகஸ்தர் மற்றும் பிரதேசசெயலக உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டு புதிய செயலாளரை வரவேற்றனர்.

புதியது பழையவை