மட்டக்களப்பு - காத்தான்குடிப் படுகொலையின் 33வது நினைவு தினம்!மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று 33வது {ஹதாக்கள் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாயல்;, காத்தான்குடி {ஹஸைனிய்யா
பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்ட 103 முஸ்லிம்கள் விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதலில் படுகொலை
செய்யப்பட்டனர்.

அவர்களை நினைவு கூர்ந்து இந்த {ஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன், காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள்,
பொதுச் சந்தைகளும் மூடி காணப்பட்டன.
{ஹதாக்கள் நினைவு தினத்தையொட்டி புனித அல்குர்ஆன் ஓதப்பட்டு விஷேட துஆப்;பிராத்தனையும் இடம்பெற்றது.
நினைவு தின நிகழ்வில் உலமாக்கள், பள்ளிவாயல்கள் நிர்வாகிகள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின்
சம்மேளன தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை