மதுபோதையில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது!



மட்டக்களப்பு வாழைச்சேனையில் மதுபோதையில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நேற்றைய தினம் வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபர் ஒருவருக்கு தாக்குதல்
மதுபோதையில் நபர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்டு பதற்றத்தை தோற்றுவிக்க முயற்சித்தமைக்காகவே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதியது பழையவை