"எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. இதை உணர்ந்து இலங்கை அரசு செயற்பட வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அரசு எம்மை ஏமாற்றும் அளவுக்கு நாம் அடிபணிந்து போகமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதியுச்ச அதிகாரப் பகிர்வு
"புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் அபிலாஷைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், வடக்கு - கிழக்கில் சரித்திர ரீதியாகத் தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்ற அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் போன்ற விடயங்களில் எந்தவித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை
இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் எங்கள் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.