பாடசாலை நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்



பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த யோசனை தொடர்பான அறிக்கை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட யோசனை
காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அத்துடன் மாணவர்களிடையே பங்குச் சந்தை மற்றும் நிதி அறிவாற்றல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 100 பாடசாலைகளில் மூலதனச் சந்தை தொடர்பான கற்கைநெறிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


அதன் முதற்கட்டமாக இன்று (31.08.2023) கண்டி நுகவெல மத்திய மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் குறித்த பாடநெறி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை