வேனில் சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு!அம்பலாங்கொட தர்மசோகா கல்லூரிக்கு அருகில் இன்று (31-08-2023) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே வேனில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.
புதியது பழையவை