இடியுடன் கூடிய மழை - பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை!தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, செப்டம்பர் 01 ஆம் திகதி இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழை நிலைமையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதியது பழையவை