மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்திற்கு இரவு வேளையில் பயணம் செய்பவர்களுக்கான மிக முக்கியமான அறிவிப்பு!



மட்டக்களப்பு போரதீவுப்பற்று மண்டூர் முருகன் ஆலயத்திற்கு இரவுவேளைகளில் பயணிக்கும் பக்தர்களின் கவனத்திற்கு!

நேற்றையதினம் 2023/08/24 ஆம் திகதி வேத்துச்சேனை கிராமத்தில் கிராம வாசிகளை அச்சுறுத்திய நிலையில் காட்டுயானைகளினை கிராமத்திலிருந்து அகற்றும் பணியில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் ஒரு காட்டுயானையானது துரதிர்ஷ்டவசமாக வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரினை தாக்கி அவர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் இழந்துள்ளார் என்பதனையும் குறித்த காட்டுயானையானது வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் தற்பாதுகாப்பிற்காக தாக்கப்பட்ட நிலையில் தற்போதுவரை மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதி பாதையோரத்தினை அண்டிய நவகிரி ஆற்றினது பற்றைக்காடுகளில் தங்கிநிற்கின்றது என்பதனையும் குறித்த காட்டுயானையானது தாக்கக்கூடியதும் மிகவேகமாக ஓடக்கூடியதனையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

எனவே குறித்த வீதியில் பயணிப்போர் சற்று அவதானத்துடன் பயணிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
புதியது பழையவை