கொழும்பு சாஹிராக் கல்லூரி - உதைபந்தாட்ட அணி மீது தாக்குதல்!வெள்ளவத்தை குரே மைதானத்தில் சாஹிரா கல்லூரி மற்றும் வெஸ்லி கல்லூரிகளுக்கு இடையே இன்று உதைபந்தாட்டப் போட்டியொன்று நடைபெற்றுள்ளது.

போட்டியில் சாஹிரா கல்லூரி உதைபந்தாட்ட அணி வெற்றி பெற்றதையடுத்து பார்வையாளர்கள் மத்தியில் இருந்த சிலர் சாஹிரா கல்லூரி உதைபந்தாட்ட அணி மற்றும் அதன் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சாஹிரா கல்லூரி வீரர்கள் , சிறுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாஹிரா கல்லூரி உதைப்பந்தாட்ட அணி வீரர்கள் 10 பேர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதியது பழையவை