மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதி பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு கீழ் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று காலை கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பார் வீதியில் உள்ள சிறிய பாலத்திற்கு கீழ் சுமார் 60வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரண விசாரணையை தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.