தலைக்கவசம் அணிந்து பணியாற்றும் அரச ஊழியர்கள்!கட்டடம் தலைக்கு மேல் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அரச அலுவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் தலைக்கவசம் அணிந்து வேலை செய்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் இடம்பெற்று வருகிறது.


சில மாதங்களுக்கு முன்புதான் இந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் நலனுக்காக தலைக்கவசம் அணிந்து பணியாற்றுகின்றனர்.


அரசு அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால் அங்கு அலுவலகத்தை மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
புதியது பழையவை