மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டுமட்டக்களப்பு புதூர் சேத்துக்குடா பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (27.08.2023) பதிவாகியுள்ளது.

பலதடவைகள் ஏற்பட்ட மோதல்கள்
ஆரம்பத்தில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்கள் காரணமாக குறித்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில காலமாக இரு குழுக்களுக்கும் இடையில் பலதடவை மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணியிலே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை