சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிப்பு!



மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழு சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பலசமய மத தலைவர்கள் ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவினர் இன்றையதினம் (22.08.2023) காலை மயிலத்தமடு பகுதிக்கு வாகனங்களில் சென்றனர்.



மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைகள்
பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காக களவிஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்தனர்.

இதன்பின் கலந்துரையாடிவிட்டு பகல் 12 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தபோது, எல்லைபகுதியிலுள்ள கம்பி பாலத்தின் பகுதியில் பௌத்த தேரர் ஒருவருடன் அப்பபகுதி சிங்கள மக்கள் ஒன்றிணைந்து வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனங்களின் திறப்புக்களை எடுத்து அவர்களை தடுத்து வைத்துள்ளனர்.

இவர்களை மீட்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தலைமையிலான பொலிஸார் அந்த பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை