மட்டக்களப்பு மயிலத்தமடு-மாதவனைப் பகுதியில் நிலவும் மேய்ச்சல் தரைப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சென்ற, சர்வ மதக் குழுவினரும், ஊடகவியலாளர்களும், பௌத்த மதகுரு தலைமையிலான பெரும்பான்மை மக்காளல் சிறைப்பிடிக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று(22-08-2023) முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபிக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு, தமது கண்டனங்களை வெளியிட்டனர்.