கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பாராட்டுதலுக்குரிய செயற்பாடு - ஊடகவியலாளரின் கருத்திற்கும் முக்கியத்துவம்!



கிழக்கிலங்கை ஆலயங்களுக்கு முன்மாதிரியான செயற்பாட்டை செய்த மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய நிருவாகம்

ஆலயத் திருவிழாக்களை விட பேசு பொருளாக அண்மைக்காலத்தில் மாறியுள்ள ஆலய திருவிழாவின் போது ஆலயங்களின் வெளிவீதியில் அமைக்கப்படும் கடைகளுக்கான ஏல விற்பனைக்கு முடிவு கட்டிய கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றிஸ்வரர் பேராலய நிருவாகமானது இவ் வருடம்
முற்றுமுழுதாக ஏலம் அற்றதாக கட்டுபாட்டு விலையோடு கடைகளை வியாபாரிகளுக்கு பகிர்ந்தளித்து வியாபாரிகளுக்கும் பக்தர்களுக்கும் பெரும் உபகாரத்தை செய்து ஏனைய ஆலயங்களுக்கு முன்மாதிரியான செயற்பாட்டை மேற்க்கொண்டுள்ளது வரவேற்கத்தக்க ஒரு செயலாகும்.

திருவிழாக் காலங்களில் ஆலய வளாகத்தில் கடைகள் அமைப்பதற்கான நிலத்தினை போட்டி போட்டு முன்டியடித்துக்கொண்டு பெருந்தொகை நிதியினை கொடுத்து நிலத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு
ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் அதிகமான விலைகளுக்கு பொருட்கள் விற்பனை செய்து ஆலய தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கில் இச் செயற்ப்பாட்டை முன்னெடுத்துள்ள ஆலய நிருவாகத்தின் செயற்பாட்டை மீண்டும் ஒருதடவை பாராட்டி இந்த நடைமுறையை ஏனைய ஆலய நிருவாக சபைகளும் முன்னெடுத்து சென்றால் ஆலய வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் மனநிறைவோடு ஆலய தரிசனத்தை மேற்க்கொண்டு வீடுசெல்வர்.

குறித்த விடயம் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய நிருவாகத்தினரைப் பாராட்டி சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆலய கடைகளின் ஏலவிற்பனையின் அதிகலாபம் குறித்த செயலினை அண்மையில் ஊடகவியலாளர் சசிகரன் புண்ணியமூர்த்தி அவர்கள் தற்துணிவாக தனது முகநூல் பக்கத்தில் கருத்தினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை