மட்டக்களப்பு கல்முனை பிரதான நெடுஞ்சாலை வழியே மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி அதிவேகமாக பயணித்துக்கொண்டிருந் கார் ஒன்று களுதாவளை பகுதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் கார் விபத்தானது இன்று(27-08-2023) அதிகாலை 4.20 மணியளவில் பதிவானதுடன் விபத்தில் சிக்கிய காரில் பயணித்த மூன்றுபேருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளதுடன் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு இவ் விபத்தினால் காரினுடைய முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.