பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!



இலங்கையில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

6 மாதங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்று முன்னர் இருந்த விதிமுறைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் கல்வி, வெளிவிவகார அமைச்சுக்கள், குடிவரவு மற்றும் ஆட்பதிவு திணைக்களம் என்பவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டிருந்தால் மாத்திரமே புதிய நகலை சமர்ப்பிக்க வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் மேலும்  தெரிவிக்கின்றது.
புதியது பழையவை