வரலாற்று புகழ்மிக்க தாந்தாமலை ஆலயத்தில் - கடவுள் பெயரால் நடக்கும் பெரும் அநியாயம்!



நேற்றைய தினம் (01-08-2023) மட்டக்களப்பில் உள்ள வரலாற்று புகழ்மிக்க ஆலயம் ஒன்றுக்கு சென்றிருந்தேன் வாகனத்தை நிறுத்துவதற்கு 150 ரூபாய் என்றார்கள் அதையும் கொடுத்தேன் 1km நடந்து ஆலயம் சென்றோம் என பாதிக்கப் பட்ட மூத்த ஊடகவியலாளர் சசி அவர்கள் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது....

பூசைகள் முடிந்த பின்பு பசி ஏற்ப்பட்டது ஏதாவது சாப்பிடனும் போல தோன்றியது கடை ஒன்றிற்கு சென்று சாப்பாடு எதாவது இருக்கின்றதா என்று கேட்டபோது கொத்துரொட்டி மட்டும் இருக்கின்றது போட்டு தரவா என கேட்க நாம் 2 கொத்து 1 கொக் சோடாவும் எடுத்தோம்.


முழுவதும் சாப்பிட முடியவில்லை மிகுதியை வைத்துவிட்டு எவ்வளவு என்று கேட்டோம் 2400.00 என்றார் சாப்பிட்ட அந்த இடத்திலேயே சாப்பிட்ட சாப்பாடு செமிபாடு அடைந்துவிட்டது.

மனம் கேட்கவில்லை நீங்கள் தந்தது வெறும் ரொட்டியும் 4, 5 கரட் லீட்ஸ் துண்டுகள் போட்ட கொத்து தானே ஏன் இவ்வளவு பணம் எடுக்கின்றீர்கள் என வினாவினேன்.

கடைக்காரர் இந்த கடை வாடகை 1 இலட்சத்தி 50 ஆயிரம் கரண்ட் பில் 2000 நாங்கள் என்ன செய்வது எங்களால் இலாபம் பார்கமுடியவில்லை நாளை நகைகளை அடகு வைத்து கடை வாடகை கொடுக்க வேண்டும் என்றார்.

உண்மையில் இன்று பொருளாதார சுமைக்கு மத்தியிலும் மக்கள் படும் துயரம் சொல்லமுடியாதவை ஆலயங்கள் என்பது பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் அல்லாமல் மக்களையும் ஒரு கனம் நினைத்து பார்க்க வேண்டும்.


சிறுபிள்ளைகளை அழைத்து வருபவர்கள் பொருட்களை பார்த்து பெருமூச்சிவிட்டு செல்லும் காட்சிகள் ஒரு கனம் மனதை உருக்கியது ஏன் ஆலய நிருவாகங்கள் இவ்வாறு செய்கின்றனர்.

ஏதிர்வரும் காலங்களில் ஆலய நிருவாகங்கள் சற்று மக்களையும் மனதில் நினைத்து செயற்படுவது சாலச்சிறந்தது இந்த கருத்து பலருக்கு கடுப்பாக இருக்கும் இருந்தாலும் எந்த கடவுளும் இவ்வளவு பணம் யாரிடமும் அறவிடச் சொல்லவில்லை

சின்ன கதிர்காமம் என அழைக்கப்படும் தாந்தாமலையில் நடந்திருக்கும்
பூஞ்சிகடை,3,00,000
உணவகம்,150,000
கிழங்குபொரிகடை,30,000

ஆலய நிருவாகங்களே இது உங்களின் கவனத்திற்கு....
புதியது பழையவை