கிழக்கு மாகாணத்தில் வலசைப் பறவைகளின் வருகை அதிகரிப்பு!



மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கடுமையான வரட்சி நிலவுகின்றபோதும், வெளிநாட்டுப் பறவையினங்கள் நீர் நிலைகளைத் தேடி வருகை தருவதை
அவதானிக்க முடிகிறது.


அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி, சம்மாந்துறை, நிந்தவூர், மகாஓயா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில், வவுணதீவு, கொக்கடிச்சோலை,
வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள நீர் நிலைகளைத் தேடியே வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருகின்றன.


வலசைப்பறவைகள் ஏப்ரல் மே, ஜூன், ஜூலை மாதம் வரை இங்கு தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்வதை வழமையாகக்
கொண்டிருப்பதாக வலசை அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை