மட்டக்களப்பு மாவட்ட ஆங்கிலமொழி தினப் போட்டிகள்மட்டக்களப்பு மாவட்ட மட்ட ஆங்கில மொழி தினப்போட்டிகள், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட, களுதாவளை தேசிய பாடசாலையில்,
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.


பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் உறுப்பினரும், காணி, மறுசீரமைப்பு ஆணையாளர் என்.விமல்ராஜ் கலந்து கொண்டார்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி சுஜாதா குலேந்திரகுமார், வை.ஜெயச்சந்திரன், எஸ்.எம்.எம்.அமீர் உட்பட பலரும்
நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வலய மட்டங்களில் நடத்தப்பட்ட ஆங்கிலப் பேட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், மாவட்ட போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.
புதியது பழையவை