பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் பார்சிலோஸ் பகுதியில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில் நடந்துள்ளது.
விமானத்தில் 12 சுற்றுலாப் பயணிகளும், ஒரு விமானி மற்றும் துணை விமானியும் இருந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் விமானம் பார்சிலோசில் தரையிறங்கியபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு பாலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.