அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு!



அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

விக்டோரியாவின் பெரிக் பகுதியில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர் இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையரான அனுருத்த பிரியங்கர கொடிப்பிலி (49) என்பவர் உயிரிழந்துள்ளார்.


வாகனத்தின் சாரதியும் மற்றுமொரு பெண்ணும் சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.


வெள்ளை நிற சுபாரு காரும் நீல நிற போர்ட் காரும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை விக்டோரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை