மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தின் 140வது ஆண்டு நிறைவு விழா



மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தின் 140வது ஆண்டு நிறைவு விழா பாடசாலை அதிபர் தலைமையில் இன்று இடம்பெற்றது.

140வது ஆண்டை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு, மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் நீலமாதவானந்தா மகராஜ் அவர்களின் ஆசியுரையுடன் நடைபவனி ஆரம்பித்து வைக்கப்படது.

ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் கலைமகள் நடைபவனி இடம்பெற்றது. அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளுடன் பழைய மாணவர்கள் நடைபவனியாக வர கும்மி, கோலாட்டம் போன்ற கலையம்சம் பொருந்திய நடனங்களை பாடசாலை மாணவர்கள் நிகழ்த்தினர்.

பழைய மாணவர்கள் கிராம மக்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினர்.
நடைபவனியானது பாடசாலையில் இருந்து ஆரம்பித்து அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை ஊடாக
மகிழடித்தீவு வரை சென்று மீண்டும் அதே வழியாக பாடசாலையை வந்தடைந்தது.

இந்நடைபவனியில் அதிபர், பழைய மாணவர்கள், பாடசாலை நலன் சார்த்த அமைப்புக்களின் உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை