மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில், மாபெரும் நடைபவனி இன்று இடம்பெற்றது.
கல்லூரியில் 09வது முறையாக நடைபெறும் நடைபவனியானது, புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில் பல சிறப்பு நிகழ்வுகளுடன், நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு ஆரம்பமான நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் சேவை நலன் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர் .
கல்லூரியின் அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் மற்றும் பழைய மாணவர் சங்க தலைவர் அருட்தந்தை சகாயநாதன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற நடைபவனியில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் அருட் தந்தையர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நடைபவனியில், நாங்களும் நகரை சுத்தம் செய்வோம் எனும் தொனிப்பொருளில், மாநகரசபையுடன் இணைந்து நகரை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.