மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழப்பு!திருகோணமலை மாவட்டம் ஈச்சிலப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைத்தீவு பகுதியில் நேற்று (05 -09-2023) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈச்சிலப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் ஈச்சிலப்பற்று -இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியில் வசித்து வரும் 21 வயதுடைய சந்திரராஜ் கஜேந்திரராஜ் என்பவரே இவ்வாறுஉயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

வெருகல் கோயிலில் விசேட வழிபாட்டிற்கு தனது தாய் மற்றும் தம்பி ஆகியோரை கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் ஈச்சிலப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை