சனல் 4 காணொளியின் பின்னர் ஊடகவிய லாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்...மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறவிருந்த வேளை அக்கூட்ட த்திற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப் படாமல் பழிவாங்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் அரங்கேற்றப்பட்டது.

ஊடகவியலாளர்கள் படுகொலை அச்சுறுத் தல் பழிவாங்குதல் என்பன மட்டக்களப்பி ற்கு ஒன்றும் புதிய விடயமல்ல.ஆனாலும் முன்னாளில் ஊடகபடுகொலைக்கு யாரை சந்தேகம் கொண்டு பார்த்தார்களோ அதே நபரால் இன்றைய காலகட்டத்தில் மட்டக்களப்பில் ஒரு சில ஊடகவியலா ளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நிலை காணப்பட்டது.

இந்த இரண்டு சம்பவத்திற்கும் ஒரே நபர் அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் பிரித்தானியாவில் இருந்து
சனல் 4 என்ற சர்வதேச பலம் கொண்ட ஊடகம்  ஈஸ்டர் குண்டுத்தாக்குதலிற்கு சம்பந்தப்பட்டவர்களை அடையாளப் 
படுத்தியிருக்கிறது.

அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் தற்போதைய இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களையும் அடையாளப் படுத்தியிருந்தமையானது ஒட்டுமொத்த மட்டக்களப்பு மக்களை மாத்திரமன்றி தமிழ் சமூகத்திற்கும் பெருத்த அவமானத்தை கொடுத்திருக்கிறது..

சொந்த இனத்தை கொன்று அதிகாரத்துக்கு வர ஆசைப்பட்ட கயவர்களை இந்த மண் மாலை போட்டு வரவேற்று கொண்டதை எண்ணி வெட்கப்பட வேண்டும்.

குறித்த காணொளியில் சம்பவத்தினை தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளராகவும் ஆலோசகராவும் இருந்த அஸாத் மௌலான அவர்கள் தெளிவாக குறிப்பிட்டிருந்ததை  சான்றாக கொண்டு குறித்த பதிவு வெளியாகியிருந்தது.

இனி அதனை தமிழ்மக்கள் விடுதலைப்புலி கள் கட்சியின் ஆதரவாளர்கள் நிரகாரிக்க முற்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை ஆனால் அவர்கள் எப்படித்தான் மாற்றுக்கருத்துக்களை முகநூலில் மாத்திரம் முன்வைத்தாலும் சர்வதேச மட்டத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தாது என்றதையும்  அவர்கள் மறந்து விடக்கூடாது..

உள்ளூரில் மறுத்துரைத்து வெள்ளையடித்து பேசினாலும் சனல் 4 கூறியிருக்கின்ற இன்னொரு சம்பவம் குறித்த விடயம் சம்பந்தமாக பிள்ளையான் அவர்களிடம் வினவியபோது அதற்கான பதிலை பிள்ளையானும் அவருக்கு துணையாக நின்ற உயர்அதிகாரியும் தரவில்லை என்ற கருத்தையும் கூறியிருந்தார்கள்.

இந்த சம்பவம் பற்றி முற்கூட்டியே அறிந்து கொண்டதனால் தான் பிள்ளையான் சர்வேதச ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் இந்த விடயத்தை தன்னிடம்  வினவுவார்கள் என்ற பயத்தின் காரணமாக திடீரென  ஊடகவியலாளர் அடக்கு முறையை கையாண்டாரா என்ற சந்தேகம் வலுவாகிறது.

இனி  அஸாத்மௌலானா துரோகியாக பிள்ளையான் தரப்பால் வர்ணிக்கப்படலாம் அதுமட்டுமல்ல  மட்டக்களப்பில் உள்ள  ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்காத வாறு பல அச்சுறுத்தல் பழிவாங்கல்கள் பிள்ளையான் ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்படலாம்.

அரசதிணைக்களங்களில் கடமைபுரியும் ஊடகவியலாளர்களை மாத்திரம் வளைத்துப் போட்டு தங்களை நியாயப்படுத்தி வெள்ளையடிக்கப்படும் சம்பவங்கள்  இனி அரங்கேறும் அதற்கு இனி சில ஊடகவியலாளர்களும் சில ஊடகங்களும் விலையாக வேண்டப்படலாம்.

அண்மைக்காலமாக மக்களை சந்திக்கின்ற கூட்டங்களில் கட்சி மாநாடுகளில் பிள்ளையான் அவர்களாலும் அவரது கட்சியினராலும் பேசப்படும் வார்த்தை இந்த ஊரைச் சாந்த மக்கள் பிரதிநிதி மக்களுடன் மக்களாகவே நிற்பார் இறந்தாலும் இந்த மண்ணிலே இறப்பார் என்ற வீரவசனம் உணர்ச்சிப் பேச்சுக்கள் இடம் பெற்று வந்ததை யாரும் மறந்து விடக்கூடாது..

அப்படியான பேச்சுக்கள் இடம்பெற்றதற்கான  காரணம் இவரால் வெளிநாடுகளுக்கு தப்பி த்துப் போகவோ அரசியல்ரீதியான நடவடிக்கைக்கோ செல்லமுடியாதவாறு தடைகள் சர்வதேசமெங்கும் ஏற்படுத்தப்பட் டுள்ளது. என்ற உண்மையை மறைப்பதற்காவே இந்த மண்ணின் மைந்தன் மக்களுக்கான அரசியல்வாதி என்றெல்லாம் மேடைமேடையாக பிரச்சாரம் செய்தார்கள் என்ற உண்மையைம் புரிந்து கொள்ளுங்கள்..

தன் சொந்த மட்டக்களப்பில் உள்ள சொந்த இனத்தை  குண்டுத் தாக்குதலில் கொன்றும்  அவயங்களை பறித்தெடுத்தும்  பாதிக்கப்பட்டவர்களின் வலியின் மேல் நின்று அரசியல் ஆதாயம் தேடும் அரக்ககுணங்கொண்ட கொடூரர்களை யார் தண்டிப்பார்கள்.

எதும்அறியாத ஆதரவாளர்கள் இழந்த இந்த குரோத கொடூர செயலை எப்படி நியாயப்படுத்தப் போகிறீர்கள்..உண்மை ஒருகாலமும் உறங்கிடாது என்பதற்கு 
சனல் 4 ஊடகம் ஒரு சாட்சி..

இனியும் மட்டக்களப்பில் ஊடக அச்சுறுத்தல் காட்டிக்கொடுப்பு என்பன  நிறுத்தப்பட்டு  மக்கள் முன் நியாயத்தை கொண்டு சேர்க்க வேண்டிய இக்கட்டான சூழலுக்குள் ஊடக வியலாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
புதியது பழையவை