நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட மேலும் சில சட்டமூலங்கள் தொடர்பில் விவாதிப்பதற்கு நாடாளுமன்றம் இன்று முதல் கூடவுள்ளது.

இன்றைய தினம் ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனியார் உறுப்பினர் சட்டமூலம் உள்ளிட்ட மேலும் சில சட்டமூலங்கள் குறித்த இரண்டாம் வாசிப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதம் நாளை முதல் மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 8ம் திகதி மாலை அது தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை