உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்வது குறித்து ஆலோசனை



உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான ஆயத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.


நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அதற்கான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

தேர்தலுக்காக செலவிடப்பட்ட 145 மில்லியன் ரூபாய் பணம் மீளப் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காக செலவழித்த பணத்தை மீட்க முடியாமல் உள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த விடயம் தொடர்பாக பரிசீலித்து நிவாரணம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதியது பழையவை