மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மோட்டார் சைக்கிள் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான பயிற்சி செயலமர்வு,மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பிரதி பொலீஸ் மா அதிபர் அஜித் ரோகணவின் ஆலோசனைக்கு அமைய, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் என்.பி.லியணகே
மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ.எதிரிமான ஆகியோரின் பணிப்புரையில், மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி .ஐ. பி .சரத் சந்திரவின் ஒழுங்கமைப்பில் பயிற்சி செயலமர்வு இடம்பெற்றது.
மாவட்டத்தின் 14 பொலிஸ் பிரிவில் கடமை யாற்றுகின்ற போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.