திருகோணமலையில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு!திருகோணமலையில் 99% தமிழர்கள் செரிந்து வாழும் பெரியகுளம் சந்தியில், சட்டவிரோதமாக தமிழர்களின் காணியை அபகரித்து, பிக்கு ஒருவரால் பௌத்த மக்களே இல்லாத இடத்தில் விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது.

இன்று விகாரை, நாளை சிங்கள குடியேற்றம், நாளை மறுநாள் தமிழ் மக்கள் அடித்து வெளியேற்றபடுவோம். என அச்சப்படுகின்ற காரணத்தினால் நாளைய தினம் திருவண்ணாமலை வாழ் தமிழ் மக்களினால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது

இதனை உணர்ந்து நாளை (01.10.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பெரியகுளம் சந்தியில் தமிழ் மக்களாக சிங்கள பேரினவாத பிக்குவின் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக ஒன்று திரண்டு, எங்களின் தார்மீக எதிர்ப்பை வெளிப்படுத்த அனைவரையும் ஒன்று திரளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்

"இன்று நிலத்தை இழந்தால், நாளை நாதியற்று போவோம்" இன்னும் வாசகத்துக்கு அமைய நாளைய தினம் அனைவரையும் அணி திரள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை