மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் 16வது நாளாக சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்



மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த 15ஆம் திகதி முதல் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இன்றைய தினம் கால் நடை பண்ணையாளர்களின் குடும்பத்தினரும் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டதுடன் மனித சங்கிலி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் பண்ணையாளர்களின் குடும்பத்தினர் தமது பிள்ளைகளுடன் கலந்துகொண்டு தமது கோரிக்கையினை நிறைவேற்றுமாறு கோரி போராட்டம் நடாத்தினார்கள்.
இன்றைய போராட்டத்தில் பெருமளவான குடும்ப உறுப்பினர்களும் பண்ணையாளர்களும் கலந்துகொண்டதுடன் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடும் வகையிலான பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.

‘ஜனாதிபதி நியாயமான எமது கோரிக்கையினை நிறைவேற்றவேண்டும். இந்த போராட்டம் யாரின் காணியையும் கோரி முன்னெடுக்கவில்லை. எமது காணியை எமக்கு வழங்குமாறு கோரியே போராடுகின்றோம்’ என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

புதியது பழையவை