திரு ரணில் விக்ரமசிங்கே அரசாங்கம் முன்மொழிந்துள்ள "Online Safety" சட்ட மசோதாவின் கீழ்
Facebook மற்றும் Twitter போன்ற சமூக தளங்களில் தேசிய பாதுகாப்பு , பொது அமைதி, உட்பட்ட சமூக அரசியல் விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பதிவுகள் அல்லது விவாதம் 'தவறானது' என அரசாங்கம் கருதினால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்
Facebook மற்றும் Twitter போன்ற சமூக தளங்களின் பதிவுகள் 'தவறானது' அல்லது குறித்த பதிவுகளால் குழப்பங்கள் ஏற்படும் என அரசாங்கம் கருதினால் குழப்பங்கள் ஏற்படாவிட்டாலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
மதங்கள் தொடர்பான சமூக தள பதிவுகள் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் என கருதினால் அல்லது அரசாங்கம் குறித்த பதிவுகள் "தவறானது" என கருதினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கபடும்
சமூக தள பதிவுகள் மூலம் யாரையும் அவமானபடுத்தி அல்லது வேறு ஒருவரை தூண்டி குறித்த நபர் குற்றம் புரிந்தால் பதிவு செய்த நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்
சமூக தளதத்தில் கலகத்தை ஏற்படுத்தும் நோக்கில் முப்படையினருக்கான உத்தரவுகள் குறித்து விவாதித்தால் அல்லது அத்தகைய உத்தரவுகளின் எதிர்மறையான சமூக தாக்கத்தைப் பற்றி பதிவு செய்தால் அல்லது அரசு படையினர் தொடர்பான பதிவுகள் "தவறானது "கருதினால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
மேற்படி சட்டமூலத்தின் கீழ் நிறுவப்படும் Online Safety Commission வழிகாட்டுதல்களை அல்லது உத்தரவுகளை 24 மணி நேரத்திற்குள் பின்பற்றத் தவறினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை வைக்கப்பட முடியும்
இது தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்கு எந்த வழியும் வழங்கப்பட மாட்டாது
Online Safety Commission "அனுமதிக்காத தகவல்களை" வெளியிடும் இணையதள நிறுவனமொன்றுடன் பண கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
மேற்குறிப்பிட்ட எந்த குற்றத்தைச் செய்யாவிட்டாலும், குற்றத்தைச் செய்த யாராவது ஒருவருடன் தொடர்பில் இருந்ததற்காக மட்டும்,குற்றத்தின் அதிகபட்ச தண்டனையின் பாதியளவு சிறைத் தண்டனை விதிக்கப்படும்
இந்த சட்ட மசோதா மூலம் ஜனாதிபதி நியமிக்கும் 5 பேர் கொண்ட Online Safety ஆணைக்குழு (Commission) மேற்குறிப்பிட்ட விடயங்களை கையாளுவார்கள்
குறிப்பாக இந்த ஆணைக்குழு சமூக தளங்களின் பதிவுகள் 'தவறானதா' அல்லது இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள்
சட்டமூலத்தில் எந்த பதிவுகள் தவறானது என்பதை வரையறுப்பதற்கான தெளிவான விளக்கங்கள் இல்லை
இதுபோதாதென்று இந்த ஆணைக்குழுவிற்கு எதிராக எவ்வித சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றைத் கூட தொடுக்க முடியாது.