மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா சேவைகால நீடிப்பு இன்று புதன்கிழமை (27-09-2023) மறுக்கப்பட்டு கடிதம் பொது உள்நாட்டு அமைச்சு அறிவித்ததையடுத்து அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி 60 வயதில் ஓய்வூதியம் பெற்றுச் செல்கின்றார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த அரசாங்க அதிபர் கடந்த ஜனவரி 18 ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையை பெறுப்பேற்று கடமையாற்றிவரும் இவர் எதிர்வரும் 29 ம் திகதி 60 வயதை பூர்த்தியடைந்த நிலையில் அரச சேவையில் இருந்து ஓய்வூதியம் பெற்றுகின்றார்.
இந்த நிலையில் தனது ஓய்வூதிய காலத்தின் பின்னர் தொடர்ந்து அரச சேவையில் கடமையாற்றுவதற்கு பொது உள்நாட்டு அமைச்சிடம் சேவை கால நீடிப்பு கோரியுள்ள நிலையில் கால நிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் இன்று அனுப்பபட்டுள்ளது
இதனையடுத்து அவர் எதிர்வரும் 29 ம் திகதியுடன் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் இவருக்கு இன்று பிரியாவிடை கச்சேரியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த அரச அதிபராக யார் வருவாரோ?’பலர் முயற்சிக்கின்றனர் ..!