மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் - வைத்தியர்களின் அசமந்த போக்கினால் பறி போகும் உயிர்கள்



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு சென்ற சிறுமி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி திராய்மடு பகுதியை சேர்ந்த சாந்தகுமார் இப்சிபா என்ற (17) வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவம் தெரியவருகையில்.

கா/போ/த சாதாரண பரீட்சையில் தோற்றியிருந்து பெறு பேறுக்காக காத்திருந்த நிலையில், கடந்த பல நாட்களுக்கு முன்னர் தனது சகோதரியோடு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

வைத்திய சாலையில் வழங்கிய மாத்திரைகளை பாவித்து வந்த போது கடந்த புதன் கிழமை காய்சலும் சத்தியுமாக இருந்த போது தனது தாயார் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் (15/09/2023)ஆம் திகதி அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்த சிறுமியின் தாயார் நேற்றைய (14)தினம் வந்து பார்த்த போது சிறுமியின் உடல் குளிர்ந்த நிலையில் இருந்ததாக ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளதும்,

இன்று வைத்திய சாலை முன்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை