தியாக தீபம் திலீபனுடைய 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்தமிழர் தாயகத்தின் முதன்மை தியாகியான தியாகி திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம்(15-09-2023) உணர்வு பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தனது தாயகத்திற்காக இந்தியாவின் வல்லாதிக்க கண்களை திறப்பதற்காக திலீபன் மேற்கொண்ட அந்த தியாக பயணம் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் பன்னிரு நாட்கள் தொடர்ந்தன.

பன்னிரண்டாவது நாளில் அந்த தியாகப் பயணம் தியாக மரணத்துடன் முற்றுப்பெற்றாலும், தமிழர் தாயகம் அறவழி என்ற தடத்தில இன்று வரை போராடி வருகிறது.

தமிழர் தேசமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று(14) நள்ளிரவு கடந்தவுடன் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில்  36 ஆவது ஆண்டின் முதலாவது நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் நினைவிடத்தில்
இதன்பின், தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த 9.45 மணியளவில் இன்று பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு, திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


பொதுச் சுடரினை மாவீரர்களான வண்ணவில் மற்றும் ஜெகன் ஆகியோரின் சகோதரரும் முன்னாள் போராளியுமான விடுதலை என்பவர் ஏற்றி வைத்தார்.முன்னணியின் ஏற்பாட்டில்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலானது நள்ளிரவு 12 மணியளவில், நல்லூருக்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் நினைவேந்தல் தூபியடியில் நடைபெற்றுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.


தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவணியும் இதன்போது ஆரம்பித்துவைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை