ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உருவப் பொம்மை எரித்து போராட்டம்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது எனவும்இ தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசளுக்கு முன்னால் (15 -09-2023) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 23வது நினைவு நாள் நாளையதினம் (16 -09-2023) சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வுக்கு அவர் வரக்கூடாது என்று அவரை எதிர்த்த ஆர்ப்பாட்டமே இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ்இ கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர்களின் உருவச் சிலைகள் எரிக்கப்பட்டது.

புதியது பழையவை