இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானர்இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்த் திரையுலகிலும், சின்னத்திரையிலும் நட்சத்திர நடிகராக வலம் வந்த மாரிமுத்து திரைப்படங்களை இயக்கியும் இருக்கின்றார்.

இன்று காலை தொலைக்காட்சி நாடகம் ஒன்றுக்காக குரல்பதிவு பணிகளை நிறைவு செய்துவிட்டு 8:30 அளவில் வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவரது இல்லம் சாலிக்கிராமம் அருகே உள்ள நிலையில் அங்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை