சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்பு!



சிங்கப்பூர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழரான தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்கவுள்ளார்.

சிங்கப்பூரில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார்.இதனையடுத்து சிங்கப்பூரின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அவர் பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதிக்கான பதவியேற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை தர்மன் சண்முகரத்னம் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை