மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு பதில் கூற மறுத்த பிள்ளையான்மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்கூற மறுப்பு தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களை பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பார்வையிட வருகை தந்துள்ளார்.

இதன்போது தனது விஜயம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்கூற சிவனேசத்துரை சந்திரகாந்தன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல் நடத்தியவர்களை உடன் கைது செய்க! சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து
கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல் நடத்தியவர்களை உடன் கைது செய்க! சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து


கடும் குற்றச்சாட்டு
இதன்போது அவர், ஊடகங்கள் அங்கேயும், இங்கேயும் சிறுசிறு துண்டுகளாக எடுத்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டு வருகின்றது. தான் பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய விடயங்களை ஊடகங்களில் பிரசுரிக்க முடியும், ஆனால் உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பண்ணையாளர்களுக்கு மத்தியில் ஊடகங்களையும்,ஊடகவியலாளர்களையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளதாகவும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை