காட்டு காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருவர் உயிரிழப்பு!



ஹதுன்கம மற்றும் மஹாஓயா பிரதேசங்களில் இடம்பெற்ற காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாஓயா, பொரபொல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 82 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பொலிஸார் தெரிவித்தது
யாக்கினிகல மலை பகுதிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் ஹதுன்கம, ஹிம்பிலியாகட பகுதியில் காட்டு யானை தாக்கி 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில் பிரதேசவாசிகள் மற்றும் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போதே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை